உலகம் Covid-19

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் பிரதமர்.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!

Summary:

முதல் நபராக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்தநிலையில், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அணைத்து நாடுகளிலும் மருத்துவ வல்லுநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு சோதனை அளவில் நடைபெற்று முன்னேற்ற பாதையில் சென்று வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை வினியோகிக்கும் பணி, பல நாடுகளில் துவங்கியுள்ளது.

இந்தநிலையில், இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று முதல் தொடங்கவுள்ள நிலையில் முதல் நபராக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். உலக அளவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முதல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகும். தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களை ஊக்கப்படுத்தும் விதமாக, தான் முன்மாதிரியாக இருப்பதாகக் கூறினார். 


Advertisement