#BigBreaking: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உட்பட மெட்டா செயலிகள் முடங்கியது; பயனர்கள் அவதி..!

#BigBreaking: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உட்பட மெட்டா செயலிகள் முடங்கியது; பயனர்கள் அவதி..!



Facebook Instagram Down around Worldwide 

 

உலகளவில் தங்களின் கருத்துக்களை பகிரும் முக்கிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இருப்பது பேஸ்புக், இன்ஸ்டாகிராம். 

இவை மெட்டா நிறுவனத்தின் அங்கமாக தற்போது இயங்கி வருகிறது. பயனர்களுக்கு பல்வேறு புதுபுதுப்பு அம்சங்களையும் தயாரிப்பு நிறுவனம் வழங்கி வருகிறது. 

அவ்வப்போது இச்செயலிகள் தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொள்வது இயல்பானது. இந்நிலையில், தற்போது உலகளவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடங்கி இருக்கின்றன. 

பல நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லாகின் செய்ய இயலாமல் பயனர்கள் அவதிப்படுகின்றனர். இதனை சரி செய்யும் முயற்சியில் மெட்டா நிறுவனத்தின் தொழில்நுட்ப குழு களமிறங்கி இருக்கிறது.