உலகம்

பார்க்க ஆள் இல்லாமல் அனாதையாக இறந்துகிடந்த முதியவர்கள்..! கண்ணீர் வரவைக்கும் கொரோனா மரணங்கள்..!

Summary:

Elderly people died in Spain orphanage due to corono

கொரோனா வைரஸின் கோரப்பிடியில் உலக நாடுகள் அனைத்தும் சிக்கி தவித்துவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் உருவான சீனாவை அடுத்து, இத்தாலி, ஈரான் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில், ஸ்பெயின் நாட்டில் நேற்று ஒருநாள் மட்டும் சுமார் 514 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 42,058 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை  2991 பேர் அந்நாட்டில் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் பரவிவரும் மேட்ரிட் நகரில் ராணுவ வீரர்கள் அங்கிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் கிருமிநாசிகளைக் கொண்டு சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒரு கட்டிடத்தில் மட்டும் பலர் படுக்கைகளில் தனியாக இறந்து கிடப்பதை கண்டு ராணுவ வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இறந்தவர்கள் அனைவரும், வயதானவர்கள், வேளையில் இருந்து ஓய்வு பெற்ற முதியவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதியோர் இல்லத்தில் வசித்து வந்ததும், விடுதி காப்பாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிசெய்தவுடன் அவர்களை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் நாட்டு மக்களை கடுமையாக எச்சரித்துள்ளார். இதுபோன்று மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்பவர்கள் மீது வழக்கு தொடரப்படும் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில், விடுதியில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் அனைத்தும் ஐஸ் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.


Advertisement