ஒருபக்கம் கொரோனா, மறுபக்கம் எபோலா! சிக்கித்தவிக்கும் நாடு!

ஒருபக்கம் கொரோனா, மறுபக்கம் எபோலா! சிக்கித்தவிக்கும் நாடு!


Ebola virus in congo

உயிர்க்கொல்லி நோயான கொரோனா ஒருபுறம் மக்களை அழித்து வரும் நிலையில், காங்கோ நாட்டில் ஆட்கொல்லி நோயான எபோலாவுக்கு ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 215 பாதிக்கப்பட்டதில், 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஆப்பிரிக்காவின் ஆட்கொல்லி நோயான எபோலாவும் அங்கு பரவி வருகிறது.

corona

கடந்த பிப்ரவரி மாதம் கிழக்கு காங்கோவில் இளைஞர் ஒருவர் காய்ச்சல் உள்ளிட்ட சில உடல் உபாதைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 50 நாட்கள் தொடர் சிகிச்சையளிக்கப்பட்டும், அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். சோதனையின் போது அந்த இளைஞருக்கு எபோலா காய்ச்சல் தாக்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே உலகத்தையே அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் ஒருபுறம் மக்களை அழித்து வரும் நிலையில், காங்கோ நாட்டில் ஆட்கொல்லி நோயான எபோலாவுக்கு ஒருவர் உயிரிழந்திருப்பது அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.