கொரோனா தொற்று அதிகரிப்பால்... வடகொரியா தலைநகரில் ஊரடங்கு அறிவிப்பு...!

கொரோனா தொற்று அதிகரிப்பால்... வடகொரியா தலைநகரில் ஊரடங்கு அறிவிப்பு...!


Due to increase in corona infection... curfew announcement in North Korea capital..

வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தலைநகர் பியோங்யாங்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

சகடந்த 2019-இல் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை முடக்கிப் போட்டது. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், மேலும் அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மிக மோசமான நிலைமையை ஏற்படுத்தியது. 

உலகெங்கும், கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது கொரோனா அடுத்த அலை குறித்த பீதியை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. 

தற்போது வடகொரியா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தலைநகர் பியோங்யாங்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  

ஐந்து நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் வெளியே எங்கும் செல்லாமல் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.