அரசியல் உலகம்

எல்லாம் போலி.. அமெரிக்க அதிபர் தேர்தலில் நான்தான் வெற்றி - டொனால்ட் டிரம்ட் அதிரடி ட்விட்..

Summary:

அமெரிக்க அதிபர் தேர்தலில் நான்தான் வெற்றிபெற்றேன் என்று தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் நான்தான் வெற்றிபெற்றேன் என்று தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோ பைடன் (77 வயது) தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் மற்றும் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை தோற்கடித்து அமோக வெற்றி பெற்றார்.

ஆனாலும் ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர் கட்சியினர் மோசடியில் ஈடுபட்டதாகவும், மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூறி ட்ரம்ப் ஆதரவாளர்கள் பல இடங்களில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.

இந்தநிலையில், தேர்தல் மோசடி மூலம் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக டிரம்ப் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ஆனால், தற்போது தேர்தலில் தானே வெற்றி பெற்றதாகவும், ஜார்ஜியாவில் நடைபெற்ற மறுவாக்கு எண்ணிக்கை போலியானது எனவும் ட்ரம்ப் மீண்டும் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.


Advertisement