வைரல் வீடியோ: பூனை தலையில் விழுந்து சுருண்டு விழுந்த நபர்..! பூனையிடம் சண்டைக்கு போகும் நாய்.! வீடியோவைப் பாருங்கள்.

சாலையில் நடந்துசென்ற ஒருவர் மீது பூனை விழுந்ததில் அந்த நபர் சசுயநினைவை இழைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து வெளியான வீடியோ காட்சியில், நபர் ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது பூனை ஒன்று உயரமான கட்டிடத்தில் இருந்து அந்த நபரின் தலைமீது பலமாக விழுந்துள்ளது. இந்த எதிர்பாராத நிகழ்வில் அந்த நபர் அதே இடத்தில் சுயநினைவை இழந்து சுருண்டு விழுகிறார்.
தனது உரிமையாளர் ஒரு பூனையால் தாக்கப்பட்டதை அறிந்த அவரது நாய் அந்த பூனையை தேடி கண்டுபிடித்து அதனுடன் சண்டையிடுகிறது. இதனிடையே சாலையில் விழுந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 23 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தற்போது வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவருக்கு நேரம் சரி இல்லை என்றால் பிரச்சனை எந்த ரூபத்தில் வேண்டுமென்றாலும் வரலாம் என்பதற்கு இந்த காட்சி ஒரு உதாரணம். அந்த வீடியோ காட்சியை நீங்களே பாருங்கள்.