தானாகவே மொட்டை அடித்து கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர்! மொட்டை அடித்து கொண்டதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா.!

Davit varnar donate his hear for doctor


Davit varnar donate his hear for doctor

கொரோனா வைரஸ் இன்று உலக மக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த நோயிலிருந்து மக்களை காப்பாற்ற இரவு, பகல் பாராமல் மருத்துவர்களும், செவிலியர்களுக்கு உழைத்து வருகின்றனர். அதற்காக உலக மக்கள் அனைவரும் தங்களது நன்றியினை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கு தனது நன்றியை தெரிவிக்கும் விதமாக டிரிம்மர் மூலம் ஷேவ் செய்து மொட்டை அடித்து கொண்ட வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Varnar

மேலும் வார்னர் அதில் தனது சகவீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலியையும் இதுபோல் செய்யுமாறு கூறியுள்ளார். தற்போது வார்னரின் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.