பெண்ணின் சூட்கேஸை திறந்த பார்த்த ஏர்போர்ட் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி...

பெண்ணின் சூட்கேஸை திறந்த பார்த்த ஏர்போர்ட் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி...


customs-staffs-found-12-yrs-of-human-bone-fragments-in-

ஜெர்மனியின் மியூனிக் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் ஒரு பெண்ணின் சூட்கேஸை திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

ஆர்மீனியா நாட்டை பெண் ஒருவரின் சூட்கேஸை மியூனிக் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் எலும்புக்கூடுகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனையடுத்து அந்த பெண்ணிடம் விசாரணை செய்ததில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. 

அதாவது கடந்த 2008 ஆம் ஆண்டு கணவர் இறந்ததை அடுத்து அந்த பெண் கணவனின் நினைவாக அவரது எலும்புக்கூட்டை தன்னுடன் வைத்து பாதுகாத்து வந்துள்ளார். தற்போது சொந்த நாட்டிற்கு திரும்புவதால் அந்த எலும்புக்கூடுகளை எல்லாம் சூட்கேஸில் வைத்து எடுத்து வந்ததாக கூறியுள்ளார். 

இச்சம்பவம் குறித்து விசாரணை செய்த பின் அந்த பெண் மீது எந்த ஒரு தவறும் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். மேலும் இறந்துபோனவரின் மரணம் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்களை அந்த பெண் சமர்ப்பித்த நிலையில் அவரை சுங்க அதிகாரிகள் விடுவித்தனர்.