
Summary:
பொம்மை என நினைத்து செல்பி எடுக்க நீருக்குள் இறங்கிய நபர்.. கடைசியில் நிகழ்ந்த சோக சம்பவம்.!
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் நெஹிமியாஸ் சிப்பாடா. இவர் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ககாயன் என்ற இடத்தில் உள்ள கோளிக்கை பூங்காவிற்கு சென்றுள்ளார்.அங்கு 12 அடி நீளமுள்ள முதலை ஒன்று நீருக்குள் கிடந்ததை பார்த்த அந்த நபர் அது பொம்மை என நினைத்து அதனுடன் செல்பி எடுக்க நீருக்குள் இறங்கியுள்ளார்.
ஆனால் எதிர்பாராத விதமாக அந்த முதலை நெஹிமியாஸின் கையை கடித்து பிடித்து கொண்டது. அப்போது தான் நெஹிமியாஸ்க்கு அது உண்மையான முதலை என தெரியவந்துள்ளது.
அதனையடுத்து அந்த நபர் சிறிது நேரம் அமைதியாக இறந்து திடீரென தன்னை விடுவித்து கொண்டு தப்பியுள்ளார். இந்நிகழ்வு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement