நிலைதடுமாறிய முதியவர்.! சுற்றி பாய்ந்த 40 முதலைகள்.! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்!!

நிலைதடுமாறிய முதியவர்.! சுற்றி பாய்ந்த 40 முதலைகள்.! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்!!


Crocodile attack and killed 72 years man

முட்டைகளைச் சேகரிக்கச் சென்ற முதியவரை சுமார் 40 முதலைகள் ஒன்றாக இணைந்து கடித்துக் குதறி கொன்ற கொடூர சம்பவம் கம்போடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கம்போடியா நாட்டில் சியாம் ரிப் பகுதியில் 72 வயது முதியவர் ஒருவர் சொந்தமாக முதலைப் பண்ணையை பராமரித்து வந்துள்ளார். அங்கு சமீபத்தில் முதலை ஒன்று முட்டைகளை இட்டுள்ளது. இந்நிலையில் அந்த முதியவர் தாய் முதலையை கூண்டில் இருந்து வெளியேற்றி, அதன் முட்டைகளைச் சேகரிக்க முயற்சி செய்துள்ளார்.

அவர் கையில் தடி ஒன்றை வைத்துக்கொண்டு முதலையை அங்கிருந்து விரட்ட முயன்றுள்ளார். ஆனால் அந்த முதலை தனது வாயால் தடியை பிடித்து இழுத்துள்ளது. இதில் நிலைதடுமாறிய அந்த முதியவர் முதலை பண்ணைக்குள் விழுந்துள்ளார். 

இந்நிலையில் அங்கிருந்த 40 முதலைகள் முதியவரை சுற்றி வளைத்து கடித்து குதறியது. அந்த முதியவர் காப்பாற்றும்படி அலறியுள்ளார். ஆனால் அதற்குள் முதலைகள் கொடூரமாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது உடலின் பல பாகங்களை முதலைகள் கடித்து விழுங்கியுள்ளது. பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த போலீசார்கள் முதியவரின் சிதைந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.