கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி இந்த நாட்டில் தயாரிக்கப்படுகிறது! வெளியான புதிய தகவல்!



Coronovirus

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் இன்று உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இதனால் மக்கள் வெளியில் செல்லவே அஞ்சி வருகின்றனர். இந்நோயால் இதுவரை 4000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்நோயால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நோய் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 50க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் இந்நோயால் உயிரிழந்துள்ளார்.

Coronovirus

இந்நிலையில் தற்போது இந்நோய்க்கு தடுப்பு மருத்தை இஸ்ரேல் நாட்டின் உயிரியல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அம்மருத்தை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இவை அனைத்தும் சரியாக நடந்தால் இன்னும் சில நாட்களில் தடுப்பூசி தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளதாக இஸ்ரேல் நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து அரசு தரப்பில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.