உலகம் மருத்துவம் Covid-19

இதை மட்டும் செய்யாவிட்டால் கொரோனாவால் இன்னும் மிக மிக மோசமான பேரழிவு ஏற்படும்..! எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பின் தலைவர்.!

Summary:

Corona may cause more danger if not follow basic rules

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கா விட்டால் கொரோனா வைரஸால் மிகவும் மோசமான பேரழிவுகள் ஏற்படும் என  உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 13,208,530 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 574,550 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகள் கொரோனா பாதிப்பில் முதல் மூன்று இடத்தில் உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளும் வேகமாக நடந்துவருகிறது. இந்நிலையியல் ஐரோப்பியா, ஆசிய நாடுகள் பல கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன எனவும், இன்னமும் பல நாடுகள் தவறான திசையில் சென்று கொண்டிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.

மிகவும் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் முறையாக பின்பற்றாமல் போனால் கொரோனா அதன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றும் இப்போது இருக்கும் நிலைமையைவிட இன்னும் படுமோசமாக அழிவை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.


Advertisement