கண்ணீர் சோகம்... இரயில் தடம்புரண்டு கோர விபத்து.. 60 பேர் பலி., 50 பேர் உயிர் ஊசல்..!

கண்ணீர் சோகம்... இரயில் தடம்புரண்டு கோர விபத்து.. 60 பேர் பலி., 50 பேர் உயிர் ஊசல்..!



Congo Cargo Train Accident 50 Died 60 Injured

சரக்கு இரயிலில் சட்டவிரோதமாக மக்கள் பயணம் செய்த நிலையில், இரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் 60 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ குடியரசில், பயணிகள் இரயில் சேவை என்பது போதுமான அளவு கிடையாது என்பதால் மக்கள் சரக்கு இரயில்களில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், அங்குள்ள ளூயன் மாகாணத்தில் இருந்து டெங்கி நகருக்கு சரக்கு இரயில் புறப்பட்டு சென்ற நிலையில், இந்த இரயிலில் 100 க்கும் மேற்பட்டோர் அனுமதியின்றி, ஆபத்தான வகையில் பயணம் செய்துள்ளனர். 

Congo

இரயில், லோவாலாபா மாகாணத்தின் கிடேண்டா கிராமத்திற்கு இடையே சென்றபோது எதிர்பாராதவிதமாக தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், இரயிலில் பயணம் செய்த 60 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர், காயமடைந்தோரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.