உலகம்

இளைஞரின் நுரையீரலில் குடி இருந்த நூற்றுக்கணக்கான புழுக்கள்..! ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்.!

Summary:

Chinese man who gobbled live snakes now has lungs riddled with worms

சமைக்காத பாம்பை பச்சையாக சாப்பிட நபருக்கு நுரையீரல் முழுவதும் புழுக்கள் உருவாகி அந்த நபர் உயிருக்கு போராடும் சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸிற்கு முக்கிய காரணம் சீனர்களின் உணவு பழக்கவழக்கம்தான் என உலகம் முழுவதும் புகார் தெரிவிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், அதிகப்படியான வயிற்றுவலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அவர் சாப்பிட உணவு முறை குறித்து மருத்துவர்கள் அவரிடம் பலமுறை கேட்டும், தான் கடல் உணவுதான் அதிகம் சாப்பிட்டதாக பொய் கூறியுள்ளார். இறுதியில் அந்த நபரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது நுரையீரல் முழுவதும் உயிருடன் புழுக்கள் நெளிந்துள்ளது.

இதனை அடுத்து தான் சமைக்காத பாம்பு ஒன்ற பச்சையாக சாப்பிட்டதாக அந்தநபர் மருத்துவர்களிடம் உண்மையை கூறியுள்ளார். இதுபோல் சமைக்காத இறைச்சிகளை உண்பதால் பாராகோனிமியாஸின் ( paragomiasis) எனும் நோய்கள் ஏற்படுவதாக  மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தற்போது அந்த நபருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று தீவிர கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் உலகம் முழுவதும் மீட்டும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement