பணக்கார மாணவர்களை குறி வைத்து கடத்தி அரை நிர்வாணமாக்கி பணம் பறிக்கும் மர்ம கும்பல்! வெளியான பகீர் பின்னணி!

பணக்கார மாணவர்களை குறி வைத்து கடத்தி அரை நிர்வாணமாக்கி பணம் பறிக்கும் மர்ம கும்பல்! வெளியான பகீர் பின்னணி!


chinaa students kidnapped in austrelia

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஏராளமான சீன மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் பணக்கார குடும்பத்தை சேர்ந்த, சீன மாணவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் ஆஸ்திரேலிய கும்பல் ஒன்று அவர்களை குறி வைத்து கடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

கடத்தப்படும் அந்த சீன மாணவர்களை மிரட்டி, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வர சொல்லும் அந்த கும்பல் அவர்களை அங்கிருந்து காரில் கடத்தி சென்று ஏதாவது ஒரு அறையில் அடைத்து வைக்கின்றனர்.

Students

அங்கு கடத்தப்பட்ட மாணவர்களை அரை நிர்வாணமாக்கி கயிற்றில் கட்டிப் போட்டு , மாணவரின் செல்போனிலேயே அந்த காட்சியை வீடியோவாக இந்த கும்பல் பதிவு செய்து, அந்த வீடியோவை சீனாவில் வசிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு கடத்தப்பட்டவரின் செல்போனிலிருந்தே அனுப்பி வைத்து, உங்கள் பிள்ளையை பணம் கொடுத்தால் தான் விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர், 

இது போன்ற சம்பவங்களை செய்து பல மில்லியன் தொகையை பறித்துள்ளது அந்த மர்ம கும்பல். இவ்வாறு சீன மாணவர்கள் 8 பேரை கடத்திய மர்மக்கும்பல் அவர்களின் பெற்றோர்களிடம் ஏராளமான தொகையை பறித்துள்ளனர். இந்தநிலையில் சிட்னியில் படித்து வரும் சீன மாணவர்கள் கடும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று அந்த நாட்டின் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.