சூழும் போர் மேகம்: 24 மணிநேரத்தில் 30 போர் விமானங்கள் 3 கப்பல்களை அனுப்பிய சீனா..!china-sent-30-fighter-jets-and-3-ships-in-24-hours

சீனாவின் தென்கிழக்கு கடல் பகுதியில் சுமார் 150 கி.மீ தூரத்தில் தைவான் அமைந்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு முன்பாக ஒருங்கிணைந்த சீனாவின் ஒரு பகுதியாக இருந்த தைவான், போருக்கு பின்பு நடந்த சில பிரச்சினைகளின் காரணமாக சீனாவில் இருந்து பிரிந்து தனி நாடாக பிரகடனம் செய்தது.

இதன் காரணமாக பசுபிக் பிராந்தியத்தில் தனது அதிகார எல்லை குறைந்துவிட்டதாக எண்ணும் சீன ஆட்சியாளர்கள் தைவானை மீண்டும் சீனாவுடன் இணைக்க பல்வேறு தந்திரங்களை கையாண்டனர். போர் நடவடிக்கையின் மூலம் தைவானை தன்னுடன் இணைத்துக் கொள்ள சீன அரசு தயாராகி வருவதாக கூறப்பட்டது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்புகளை தெரிவித்தது.

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சீனா தைவானை நோக்கி 39 போர் விமானங்களையும், 3 போர்க்கப்பல்களையும் அனுப்பியுள்ளதாக தைவான் ராணுவ அமைச்சகம் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது. சீனா அனுப்பிய போர் விமானங்களில் 'ஜே-16' ரக போர் விமானங்கள் 21, 4 'எச்-6' குண்டுவீச்சு விமானங்களும், 2 முன் எச்சரிக்கை விமானங்களும் அடங்கும் என தைவானில் இருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் இந்த அடாவடி நடவடிக்கையால் தைவானில் போர்ப்பதற்றம் நிவவி வருகிறது.