பேராபத்து... மனிதர்களுக்கு பரவியது H3 N8 பறவைக்காய்ச்சல்... உறுதி செய்த சீனா.. உலக நாடுகள் அதிர்ச்சி.!

பேராபத்து... மனிதர்களுக்கு பரவியது H3 N8 பறவைக்காய்ச்சல்... உறுதி செய்த சீனா.. உலக நாடுகள் அதிர்ச்சி.!



china-boy-affected-by-h3-n8-bird-disease

4 வயது சிறுவனுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், பறவைக் காய்ச்சல் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சீன நாட்டின் ஹெனான் மாகாணத்தில் 4 வயது சிறுவனுக்கு சிறிது நாட்களாக காய்ச்சல் உள்ளிட்ட பல அறிகுறிகள் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுவனை மருத்துவமனையில் பரிசோதித்த நிலையில், அவருக்கு பறவை காய்ச்சல் தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பறவைக்காய்ச்சல் 'எச்3 என்8' திரிபு முதல் மனித நோய் தொற்றினை பதிவு செய்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில், "வீட்டில் வளர்க்கப்படும் காகங்கள், கோழிகள் மற்றும் பறவைகள் மூலமாக மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவி இருப்பதாகவும், சிறுவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த யாருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை" எனவும் தெரிவித்துள்ளனர்.

china

இதனைத்தொடர்ந்து சுகாதார ஆணையம் கூறுகையில், 'எச்3 என்8' வைரஸ் மாறுபாடு நாய்கள், குதிரைகள் மற்றும் பறவைகள் போன்றவற்றிலிருந்து கண்டறியப்பட்ட நிலையில், மனிதர்களுக்கு இது பரவியதாக எந்த ஒரு பதிவும் இல்லை. மேலும், ஆரம்ப ஆய்வுகளின்படி இந்த மாறுபாடு மனிதர்களை கொரோனா தொற்றினை போன்று மீண்டும் மீண்டும் பாதிக்கும் திறனை கொண்டிருக்கவில்லை. 

எனவே, பெரிய அளவிலான நோய்தொற்று அபாயம் குறைவாகவே இருக்கிறது. அத்துடன் மக்களிடையே பறவை காய்ச்சல் பரவுவதற்கான ஆபத்து மிகவும் குறைவாகவே உள்ளது" என்று கூறியுள்ளனர்.