கீழே விழச் சென்ற குழந்தை.! ஹீரோவாக மாறி பூனை செய்த காரியம்.! ஆச்சரியப்படவைக்கும் அசத்தல் வீடியோ.!!

கீழே விழச் சென்ற குழந்தை.! ஹீரோவாக மாறி பூனை செய்த காரியம்.! ஆச்சரியப்படவைக்கும் அசத்தல் வீடியோ.!!



cat-save-child-video-viral

கீழே விழவிருந்த குழந்தையை பூனை ஒன்று ஹீரோவாக மாறி ஓடி சென்று காப்பாற்றிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

பொதுவாக தற்போது சமூக வலைதளங்களில் விலங்குகள், பறவைகள் குறித்த ஏராளமான வீடியோக்கள் பெருமளவில் வைரலாகி வருகிறது. அவற்றில் விலங்குகள், பறவைகளின் சேட்டைகள், அசத்தலான திறமைகள் போன்றவை பார்ப்போரை வியக்க வைக்கும். இந்த நிலையில் பூனை ஒன்று குழந்தையை பொறுப்பாக பாதுகாத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,  வீட்டில் பூனை ஒன்று குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளது. அப்பொழுது அங்கு மனிதர்கள் யாரும் இல்லை.

இந்நிலையில் சோபாவில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பின்பு இறங்கி கீழே விளையாடுகிறது. பின் அப்படியே மெதுவாக தவழ்ந்து சென்று ஓர் இடத்தில் கீழே இறங்க முயற்சி செய்கிறது. அப்போது குழந்தை கீழே விழ செல்கிறது.

இதனைக் கண்ட பூனை ஹீரோவாக மாறி பாய்ந்து சென்று குழந்தையைக் கீழே விழாமல் இழுத்துச் சென்று தள்ளியுள்ளது. சிசிடிவியில் இடம்பெற்ற இந்த பழைய வீடியோ தற்போது இணையத்தில் பரவி லைக்ஸ்களை குவித்து வருகிறது வகித்து வருகிறது