விஜய் டிவி ராசித்தா ரசிகரா நீங்க!!! குட்டி உடையில் கியூடான புகைப்படம் உங்களுக்காக!
பல்லை கண்ணாக மாற்றி மருத்துவர்கள் சாதனை.! கனடா பெண்ணுக்கு பார்வை கிடைத்த அதிசயம்.!

ஒரு பெண்ணின் பல் பிடிங்கப்பட்டு அதை கண்பார்வை தரும் திசுக்களாக மருத்துவர்கள் மாற்றி இருக்கும் சம்பவம் கனடாவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண் பார்வை இல்லாதவர்களுக்கு மாற்றாக மற்றொரு கண்ணை பொருத்துவது தான் இதுவரை தீர்வாக இருந்து வந்தது. இறந்து போன நபர்களிடம் இருந்து கண்கள் கிடைத்தால் பார்வை இல்லாதவர்கள் பல வருடங்களுக்குப் பிறகு கண்பார்வை பெறுவார்கள். இந்த நிலையில், பற்களை கொண்டு பார்வையை வர வைக்கும் அறுவை சிகிச்சை முறை ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நோயாளியின் பற்களில் ஒன்றை அகற்றி அதை செவ்வக வடிவில் மாற்றி அதில் ஒரு துணையை ஏற்படுத்தி பிளாஸ்டிக் ஆப்டிகல்ஸ் லென்ஸை பொருத்தி மீண்டும், நோயாளிக்கு அந்த பல் வைக்கப்படும். மூன்று மாதங்கள் வரை அங்கேயே இருக்கும் நிலையில், அந்த பல்லில் கண்பார்வைக்கு தேவையான ஒரு புதிய திசு உருவாகின்றது. இதை பயன்படுத்தி கண் பார்வையை ஏற்படுத்துகின்றனர்.
இதையும் படிங்க: உக்ரைன் - ரஷ்யா போரில், சொந்த நாட்டு மக்களை கடத்தி போரில் ஈடுபடுத்தும் ஜெலன்ஸ்கி? வெளியான அதிர்ச்சி தகவல்.!
இதன் மூலம் படிப்படியாக நோயாளிக்கு பார்வை கிடைக்கின்றது. இதுபோல ஒரு அறுவை சிகிச்சையின் மூலமாக தான் கண் பார்வை பெற்றதாக கனடாவை சேர்ந்த இளம்பெண் சமூக வலைதளங்களில் பதிவிட்டதை தொடர்ந்து இந்த விஷயம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: வைரல் வீடியோ.... தாகத்தில் வாடும் ராஜநாகத்துக்கு தண்ணீர் கொடுக்கும் திக் திக் நிமிடங்கள்....