தவறான வீடியோ பரவல்! சைபர் க்ரைமில் புகார் அளித்த ஜெமினி பட நடிகை கிரண் ரத்தோட்!
அமெரிக்காவில் கொள்ளையர்களின் கொடூர செயல்... இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சுட்டு கொலை...!

அமெரிக்காவில், கொள்ளையர்கள் இந்திய வம்சாவளி ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் உள்ள டேகோனி நகரில் வாகனங்களுக்கு கேஸ் நிரப்பும் நிலையம் ஒன்று உள்ளது.
அங்கு 66 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று, கேஸ் நிலையத்துக்கு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மூன்று பேர் வந்துள்ளனர்.
அப்போது அந்த கேஸ் நிலையத்தில் பணியில் இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
அந்த மர்ம நபர்கள் கேஸ் நிலையத்தில் இருந்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேஸ் நிலைய ஊழியரை சுட்டுக்கொன்றுவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.