திடகாத்திரமான உடல், ஆரோக்கிய உணவு.. ஒரே நிறுவனத்தில் 84 வருடம் பணியாற்றி ரிட்டயர்ட்... ராயல் சல்யூட் தாத்தா.. வியக்கவைக்கும் செய்தி.!

திடகாத்திரமான உடல், ஆரோக்கிய உணவு.. ஒரே நிறுவனத்தில் 84 வருடம் பணியாற்றி ரிட்டயர்ட்... ராயல் சல்யூட் தாத்தா.. வியக்கவைக்கும் செய்தி.!



brazil-worker-working-a-same-company-in-84-years

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு 84 ஆண்டுகள் ஒரே கம்பெனியில், வேலை செய்து ஒருவர் கின்னஸ் ரெக்கார்ட் படைத்துள்ளார்.

பிரேசில் நாட்டில் உள்ள பிரஸ்க் நகரில் வசித்து வருபவர் வால்டர் ஆர்த்மேன். இவர் ஒரே கம்பெனியில் கிட்டத்தட்ட 84 ஆண்டுகள் வேலை செய்து கின்னஸ் ரெக்கார்ட் படைத்துள்ளார். தற்போது ஆர்த்மேன்க்கு 100 வயது நிரம்பிய நிலையில், துணி ஆலையில் பணிபுரிந்து இந்த சாதனையை செய்துள்ளார்.

இவர் சாதாரண ஊழியராக துணி உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கி, படிப்படியாக உயர்ந்து நிர்வாகப் பதவிக்கு வந்து, இறுதியாக தனது 100வது வயதில் விற்பனை மேலாளராக பணிபுரிகிறார். இந்த விஷயம் உள்ளூர் ஊடகங்களில் செய்தியாக வெளியாகியிருந்தது.

Brazil

மேலும், இதுகுறித்து ஆர்த்மேன் கூறுகையில், "விரும்புவதை செய்வதற்காக தான் துரித உணவுகளில் இருந்து விலகி இருந்ததால், நீண்டகாலம் நிறைவான தொழிலில் வாழ்வது சாத்தியமானது. அத்துடன் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கத்தை அனைத்து இளைஞர்களும் கடைபிடிக்க வேண்டும்." என அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து "நான் சர்க்கரை மற்றும் உப்பினை உண்மையாக தவிர்க்கிறேன். உடலை காயப்படுத்தும் எந்த ஒரு விஷயங்களையும் நான் உண்பது கிடையாது. கூல்டிரிங்ஸ் மற்றும் சோடாக்களையும் தவிர்த்து ஆரோக்கியமான உணவு வகைகளையே உட்கொள்ளவதால் என் உடல் எப்பொழுதும் வலுவாக இருக்க அது உதவுகிறது" என்று கூறியுள்ளார்.