நயாகரா அருவி போல் காட்சியளிக்கும் இகுவாஸு அருவி.!! குவியும் சுற்றலா பயணிகள்..!!

நயாகரா அருவி போல் காட்சியளிக்கும் இகுவாஸு அருவி.!! குவியும் சுற்றலா பயணிகள்..!!



brazil iguazu falls flood

தெற்கு பிரசிலில் இகுவாஸு என்னும் புகழ்பெற்ற அருவி உள்ளது. தற்போது இது அமெரிக்காவில் உள்ள மிகவும் பிரத்தியேகமான நயாகரா அருவி போல காட்சியளிக்கிறது.

இந்த நகரில் கடந்த வாரமாக மிகவும் கனமழை பெய்து வந்துள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து இகுவாஸு அருவியில் வழக்கத்தை விட அதிகமான நீர்வீழ்ச்சி கொட்டி வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது.

இதன் அளவு 6 மடங்கு அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது. நயாகரா அருவி போல காட்சியளிக்கும் இந்த இகுவாஸு அருவியை காண பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

மேலும் இந்த அருவியில் ஒரு வினாடிக்கு 15 லட்சம் கன அடி அளவில் வெள்ளம் பாய்ந்து வந்தது. இந்த நிலையில், தற்போது 25 லட்சம் கன அடியாக அது உயர்ந்துள்ளது.

மேலும் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் வாழும் குடியிருப்பு மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.