என்ன ஒரு தைரியம்! சூப்பர் மார்க்கெட்டில் சென்று சிப்ஸ் பாக்கெட்டை எடுத்து சாப்பிடும் பறவை! வைரல் வீடியோ இதோ..

என்ன ஒரு தைரியம்! சூப்பர் மார்க்கெட்டில் சென்று சிப்ஸ் பாக்கெட்டை எடுத்து சாப்பிடும் பறவை! வைரல் வீடியோ இதோ..


bird-eading-chips-pocket-in-super-market

சூப்பர் மார்கெட் ஒன்றினுள் பறவை ஒன்று நுழைந்து சிப்ஸ் பாக்கெட்டை எடுத்து செல்லும் காட்சி தற்போது இணையத்தில்  வைரலாகி வருகின்றது.

சமூக வலைதளங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளை குறித்த ஏராளமான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். சில வீடியோக்கள் சிரிக்க வைப்பதும், சில வீடியோக்கள் சிந்திக்க வைப்பதுமாக இருக்கும்.

இந்த குறிப்பிட்ட வீடியோ காட்சி,  டிவிட்டரில் ஆவ்சம் நேச்சர் மற்றும் இன்கிரிடிபிள்ஸ் என்கிற பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. வெள்ளை நிற  பறவை ஒன்று சூப்பர் மார்கெட்டின் டோர் தானாகவே திறக்கும் போது தத்தி தத்தி மெதுவாக  உள்ளே செல்கிறது. பின்னர் உள்ளே சென்ற அந்த  பறவை சிப்ஸ் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் வெளியே வந்து அதனை பிரித்து மிகவும் அழகாக சாப்பிடும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி காண்பவர்களை பிரமிக்க வைத்துள்ளது. இதோ  அந்த  வீடியோ காட்சி....