விஷ பாம்புடன் போராடி நண்பனை காப்பற்றி, தன் உயிரை மாய்த்த முதியவர்! 

விஷ பாம்புடன் போராடி நண்பனை காப்பற்றி, தன் உயிரை மாய்த்த முதியவர்! 



Australian Man Dies After Being Bitten By Venomous Snake while save his friend

ஸ்திரேலிய நாட்டில் பள்ளி ஒன்றில் 100வது ஆண்டு விழா நடைபெற்றுள்ளது. இதில் 60 வயது முதியவர் அவரது நண்பர்களுடன் இந்த 100வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டுள்ளார்.

பல நாட்கள் கழித்து பள்ளி நண்பர்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியுடன் விழாவில் பங்கேற்றுள்ளனர். வாலிப கதைகளை பேசிக்கொண்டும், கேலியும் கிண்டலுமாக விழா நகர்ந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில், 60 வயதுடைய முதியவரின் நண்பரின் காலில் பாம்பு ஒன்று சுழற்றி கொண்டு இருந்துள்ளது. இதனால் உடனிருந்தவர்கள் பதற்றம் ஆக, 60 வயது முதியவர் துணித்து சென்று நண்பரின் காலில் சுற்றி இருந்த பாம்பை எடுக்க முயற்சித்துள்ளார்.

இந்த சம்பவத்தினால் பாம்பு அவரை பல முறை கடித்துள்ளது. அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் நண்பரை விடுவிக்கும் செயலில் மட்டும் கவனமாக இருந்துள்ளார். பின்னர், 60 வயது முதியவருக்கு பாம்பின் விஷம் ஏறி பலியானார். பாம்பு காலில் சுற்றிருந்த அந்த நண்பர் நலமுடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

தன் உயிரை பொருட்படுத்தாமல், நண்பனின் உயிரை காப்பாற்ற நினைத்து போராடி தன் உயிர் மாய்த்து கொண்ட முதியவரை நட்பின் இலக்கணமாக தான் கருத வேண்டும்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, சமூக ஊடகங்களில் பலர் அவரை "நல்ல நண்பன்" என்றும் அவரது துணிச்சலான செயல்களுக்காக ஒரு "ஹீரோ" என்றும் அழைத்தனர்.

இந்த சம்பவத்தில் எந்த வகையான பாம்பு சம்பந்தப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும், அந்த மனிதனின் அறிகுறிகள் வைத்து பார்க்கும் போது மிகவும் விஷமுள்ள கிழக்கு பழுப்பு நிற பாம்பை சுட்டிக்காட்டுவதாக டாக்டர் பெர்டென்ஷா கூறியுள்ளார்.