உலகம்

காட்டுத்தீயில் உயிரிழந்த கங்காரு.. கோடிக்கணக்கான மக்களின் மனதை உருக வைத்த புகைப்படம்..!

Summary:

Australia on fire images goes viral

ஆஸ்திரேலிய நாட்டில் ஏற்பட்ட காட்டு தீயால் கோடிக்கணக்கான விலங்குகள் முதற்கொண்டு மனிதர்கள் வரை பலர் இரந்துள சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, வீடுகளை இழந்து தவித்துவருகின்றனர்.

மேலும், இந்த காட்டு தீயில் இதுவரை 500 மில்லியனுக்கு மேலான விலங்குகள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில், காட்டு தீயினால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பசுமாடுகளை அதன் உரிமையாளர் மாடுகள் படும் கஷ்டத்தை பார்த்து 21 மாடுகளை சுட்டு கொன்ற சம்பவம் நடந்தது.

இதுஒருபுரம் இருக்க, காட்டு தீயில், கம்பிகளுக்கு நடுவே சிக்கிய கங்காரு ஓன்று ஜீவசமாதி அடைந்ததுபோல் தீயில் கருகி துடிதுடித்து இறந்துபோன புகைப்படம் ஓன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

அந்த புகைப்படங்களை பார்ப்பதற்கு மனதை உருக வைப்பதுபோல் உள்ளது. 


Advertisement