அத்துமீறி நுழைந்த 25 போர் விமானங்கள்!!.. அதிகரிக்கும் போர் பதற்றம்..!

அத்துமீறி நுழைந்த 25 போர் விமானங்கள்!!.. அதிகரிக்கும் போர் பதற்றம்..!



As 25 Chinese warplanes have entered the territory of Taiwan, hostilities between the two countries have increased.

தைவான் எல்லைக்குள்  25 சீன போர் விமானங்கள்  ஊடுருவியுள்ளதால் அவ்விரு நாடுகளுக்கு இடையே போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.

கடந்த 1949 ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் காரணமாக சீனாவில் உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதன் பின்னர் தைவான் சீனாவிடமிருந்து பிரிந்து தனி நாடாக பிரகடனம் செய்தது. அதனை ஏற்காத சீனா தைவான் நிலப்பரப்பு தங்களுக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடி வருகிறது. இருந்த போதிலும் உலக நாடுகள் பல தைவானை தனி நாடாக அங்கீகரித்தன.

இந்த நிலையில், சமீபகாலமாக தைவானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருவதுடன் அந்த நாட்டுக்கு நிதி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கியது.  அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தேவைப்பட்டால் தைவான் மீது படையெடுத்து அதனை ஆக்கிரமிப்பு செய்வோம் என சீனா மிரட்டி வருகிறது.

இதனை தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே கடுமையான போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சீனாவின் 25 போர் விமானங்கள் மற்றும் 3 போர் கப்பல்கள் தைவான் எல்லைக்குள் ஊடுருவியுள்ளதாக செய்திகள் வெளியாகின. கடந்த 24 மணி நேரத்தில் சீன ராணுவத்துக்கு சொந்தமான குண்டுவீச்சு விமானங்கள் உள்ளிட்ட 25 போர் விமானங்கள் மற்றும் 3 போர் கப்பல்கள் தைவானுக்குள் அத்துமீறி ஊடுருவியுள்ளதாக தைவான் ராணுவ அமைச்சகம் நேற்று கூறியது.

இதனை தொடர்ந்து, நிலைமையை சமாளிக்கை தைவான் ராணுவம் போர் விமானங்களையும், போர்க்கப்பல்களையும் அந்த பகுதிக்கு அனுப்பி வைத்ததுள்ளதாக தைவான் ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.சீன ராணுவத்தின் அத்துமீறலால் சீனா-தைவான் நாடுகளுக்கிடையே போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.