உலகம் வீடியோ

கடைக்குள் வயதான பெண்ணை கண்டதும் திருடன் செய்த காரியம்!! தீயாய் பரவும் சிசிடிவி வீடியோ!!

Summary:

armed robber kisses elder women in pharmacy

வடகிழக்கு பிரேசில் நாட்டில் அமரண்டே  என்ற நகரில் பெரிய அளவிலான மருந்து கடை ஒன்று அமைந்துள்ளது. அங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மதியம் நேரத்தில் இரு திருடர்கள் தலையில் ஹெல்மெட் மற்றும் கையில் துப்பாக்கியுடன் திருடுவதற்காக கடைக்குள் நுழைந்துள்ளனர். 

 அப்பொழுது அவர்கள் அங்கிருந்த கடை ஊழியரிடம் பணம் அனைத்தையும் எடுத்து தருமாறு மிரட்டியுள்ளனர். இந்நிலையில் அந்த நேரத்தில் கடையில் இருந்த வயதான பெண்ஒருவரும் திருடர்களை பார்த்து வந்துள்ளார். மேலும் அவரை தாமாக பணத்தையும் கொடுத்துள்ளார். 

இந்நிலையில் அதனைக் கண்ட திருடன் அதனை வாங்க மறுத்துள்ளார். மேலும் உங்களது பணம் எனக்கு வேண்டாம் என கூறி அவருடைய தலையில் முத்தமிட்டுள்ளார். பின்னர் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். 

 இந்நிலையில் இது தொடர்பாக போலீஸாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் சிசிடிவி காட்சி இணை வெளியிட்டுள்ளனர். மேலும் திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 


Advertisement