உலகம் வீடியோ

சவப்பெட்டியில் இருந்த தந்தையின் சடலத்தை, இழுத்துப்போட்டு கடுமையாக தாக்கிய பிள்ளைகள்! வெளியான பகீர் வீடியோ!!

Summary:

Angry siblings drag unfaithful dead father's corpse out of coffin in america

கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வசித்து வந்தவர் ஜாவ் லின். 72 வயது நிறைந்த அவர் கடந்த வாரம் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து இறந்தவரின் உடல் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டு நினைவு மண்டபத்தில் இறுதிச் சடங்கிற்காக வைக்கப்பட்டிருந்தது.

 இந்நிலையில் அங்கு வந்த ஒரு பெண்ணும் அவருடைய சகோதரரும் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த இறந்தவரின் உடலை கடுமையாக தாக்கி வெளியே இழுத்துப் போட்டுவிட்டு சென்றனர்.  இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர் .

அப்பொழுது ஜாவ் லின் என்ற அந்த நபர் கடந்த பல வருடங்களுக்கு முன்பு தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது குழந்தைகள் இருவரையும் விட்டுவிட்டு பிரிந்து சென்றுள்ளார். மேலும் வேறு பெண் ஒருவருடன் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

இதனால் கடுமையான கோபத்தில் இருந்த அந்த இரு குழந்தைகளும்தான் சவப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தங்களது தந்தையின் உடலை எடுத்து தாக்கியதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement