அமுல் ஐஸ்கிரீம் விரும்பிகளுக்கு அதிர்ச்சி செய்தி.. உறைந்து கிடந்த பூரான்.. ஆசையாக வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!Amul Vennila Magic Ice Cream with centipede

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு, மும்பையில் பெண் ஒருவர் வாங்கிய ஐஸ்கிரீமில் விறல் ஒன்று கிடந்ததாக அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலானது. இந்த சம்பவத்தின் தாக்கம் முடிவதற்குள், அடுத்த சர்ச்சையில் அமுல் ஐஸ்கிரீம் சிக்கி இருக்கிறது. 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியை சேர்ந்தவர் தீபா. இவர் அமுல் நிறுவனத்தின் வெண்ணிலா மேஜிக் ஐஸ்கிரீம் பெட்டி ஒன்றை வாங்கி இருக்கிறார். அதனை ஆசையாக சாப்பிட பிரித்தபோது, அதனுள் கருப்பு நிற கட்டை ஒன்று கிடந்துள்ளது. 

உறைந்த நிலையில் மீட்கப்பட்ட பூரான்

உற்றுநோக்கி பார்த்தபோது, அது பூரான் என்பது தெரியவந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர், அதனை வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார். ஏற்கனவே உணவகத்தில் உணவுகளின் தரம் பெரும் கேள்விக்குறியை சந்தித்து வருகிறது. 

அதன் தாக்கம் முடிவடைவதற்குள் அடுத்தடுத்து என பல சர்ச்சைகள் நடந்து வருகின்றன. வீடியோ உங்களின் பார்வைக்கும் இணைக்கப்பட்டுள்ளது.