பாகிஸ்தானில் வசிக்கும் அமெரிக்க, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா மக்கள்!.. எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தல்...!!

பாகிஸ்தானில் வசிக்கும் அமெரிக்க, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா மக்கள்!.. எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தல்...!!


Americans, Australia, Saudi Arabia residents living in Pakistan are urged to be cautious

பாகிஸ்தானில் இருக்கும் சவுதி அதிகாரிகள் மற்றும் மக்கள் தேவையை தவிர்த்து வெளியே எங்கும் செல்வதை தவிர்க்க வலியுறுத்தல். மேலும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு சம்பவங்கள்பல்வேறு பகுதிகளில்  அதிகரித்துள்ள நிலையில், தீவிரவாதிகள், இஸ்லாமாபாத்தின் மேரியட் ஓட்டலில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அமெரிக்கர்கள் அங்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் இருக்கும் சவுதி அரேபிய தூதரகம், பாகிஸ்தானில் இருக்கும் சவுதி அரேபிய குடிமக்கள், அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தேவையை தவிர வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. மேலும் இஸ்லாமாபாத்தில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குச் செல்ல வேண்டாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதை போல ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானில் வசிக்கும் தனது குடிமக்களுக்கு பயண ஆலோசனையை கூறியுள்ளது. இஸ்லாமாபாத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அதிகாரிகள், தேவையற்ற பயணத்தை தவிர்க்கவும் விழிப்புணர்வுடன் இருக்கவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊடகங்களை தொடர்ந்து கண்காணிக்கவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.