ஈவு இரக்கமின்றி கர்ப்பிணி மனைவி மீது 10 முறை துப்பாக்கி சூடு நடத்திய அமெரிக்க வாழ் இந்தியர்.. அதிர்ச்சி பிண்ணனி.!

ஈவு இரக்கமின்றி கர்ப்பிணி மனைவி மீது 10 முறை துப்பாக்கி சூடு நடத்திய அமெரிக்க வாழ் இந்தியர்.. அதிர்ச்சி பிண்ணனி.!


american-indian-who-mercilessly-shot-his-pregnant-wife

கேரள மாநிலம் உழவூர் என்ற கிராமத்தில் வசித்து வந்த மீரா என்பவருக்கும் பழையப்பள்ளி பகுதியில் வசித்து வந்த அமல்ராஜ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில் மீரா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் இவர்கள் திருமணம் முடிந்த கையோடு அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் குடியேறினர். இதனையடுத்து மகிழ்ச்சியாக ஆரம்பிக்கப்பட்ட இவர்களது திருமண வாழ்க்கையில் வழக்கம்போல் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் சிறு சிறு சண்டைகள் எழுந்துள்ளன.

America

இவர்களது சண்டை ஒருபுறம் இருக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் சர்ச்சுக்கு வழிபாட்டிற்காக சென்றுள்ளனர். அங்கே வழிபாடு முடிந்த பின்னர் பார்க்கிங் செய்யப்பட்ட இடத்தில் உள்ள காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அமல் ரெஜி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கர்ப்பிணி என்றும் பாராமல் தனது மனைவி மீராவை கண்மூடித்தனமாக 10 முறை சுட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த மீராவை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதோடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் கணவர் அமல் ரெஜியை கைது செய்து விசாரணை நடத்தியதில் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவியை சுட்டதை அமல் ரெஜி ஒப்புக்கொண்டார். மேலும் தற்போது மீராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.