அதிபர் ட்ரெம்புக்கு நிகழ்ந்த கேவலமான அவமானம்..! அதிர்ச்சியில் அதிபர் மாளிகை.!!

அதிபர் ட்ரெம்புக்கு நிகழ்ந்த கேவலமான அவமானம்..! அதிர்ச்சியில் அதிபர் மாளிகை.!!


america-president-donald-trem

அமெரிக்காவின் முக்கிய நகரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மார்பளவு உருவச் சிலை அமைத்து, அதில் "என் மீது சிறுநீர் கழிக்கவும்" என்று எழுதி வைத்த  நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது அமெரிக்க நாட்டின் அதிபராக பதவி வகிப்பவர் டொனால்டு டிரம்ப். ஆனால் தேர்தல் சமயங்களில் முன்னாள் அதிபர் கிளின்டன் மனைவி ஹிலாரிக்கு தான் அதிபர் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கணிக்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக வெற்றி பெற்று விட்டார்.

Tamil Spark

இந்த நிலையில் அவரது செயல்பாடு, பேச்சு, எண்ணங்கள், சிந்தனைகள் என்று அவரது நடத்தைகள் பலராலும் இணையத்தில் விமர்சித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பில் கேப்லே என்பவர் வித்தியாசமா முறையில் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

அதாவது புரூக்ளின் நகர வீதியில் ஓரமாக பசுமையான புற்களை முதலில் வளர்த்துள்ளார். அதன் பிறகு ட்ரெம்பின் மார்பளவு சிலையை செய்து அதில் என் மீது சிறுநீர் கழிக்கவும் என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளார்.

Tamil Spark

இப்படியாக பல சிலைகளை டெரம்பின் இளமை தோற்றத்தில் சுமார் 1 அடி உயரத்தில் அங்கு உள்ள பூங்காக்களில் பல இடங்களில் வைத்துள்ளார். ஏன் இவ்வாறு வைத்துள்ளீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு,  ஒரு அதிபராக அவர் செயல்படவில்லை. தன்னை ஒரு இளைஞராக பாவித்துக்கொண்டு அனைத்து முடிவுகளையும் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதனால்தான் தன்னுடைய எதிர்ப்பை காட்டும் விதமாகவே இவ்வாறு செய்துள்ளேன் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

உலகத்தையே தன் கைக்குள் வைத்து ஆட்டிப்படைக்க நினைக்கும் அமெரிக்க நாட்டில், நியூயார்க் என்ற ஒரு மாபெரும் நகரில்.. அதுவும் பல புகழ்களை அடக்கிய புரூக்ளின் பகுதியில்... அந்த நாட்டு அதிபரையே இப்படி சிலைகள் வைத்து "என் மீது சிறுநீர் கழிக்கவும்" என்று எழுதி அசிங்கப்படுத்தியுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.