புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
#BigBreaking: அமெரிக்காவில் அதிபயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை.. மக்கள் பதற்றம்.!
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா பகுதிகளில் அவ்வப்போது பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படுவது தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, பின்னர் அவை மீண்டும் திரும்ப பெறப்பட்டது.
இந்நிலையில், தற்போது அலஸ்க்காவில் அதிகபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.4 புள்ளியாக பதிவாகியுள்ளது. பூமிக்கடியில் 9.3 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இல்லை என்றாலும், மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அவர்கள் உயரமான நிலங்களை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளனர்.
Video: The #Alaska #earthquake #Tsunami pic.twitter.com/K6hpgxuk8W
— CBKNEWS (@CBKNEWS121) July 16, 2023