18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்ட 74 வயது அமைச்சர்..!

18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்ட 74 வயது அமைச்சர்..!


aged minister married young girl

நைஜீரியாவில் 74 வயதான அமைச்சர் 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நைஜீரியா நாட்டில் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ளார் சபோ நனானோ. 74 வயது நிரம்பிய இவர் கடந்த 3ஆம் தேதி ரகியா என்ற 18 வயது இளம்பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த திருமணத்தில் வெறும் மூன்று நபர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தம்பதிகள் இருவருக்கும் இடையே 56 வயது வித்தியாசம் உள்ளதால் இந்த திருமணத்துக்கு அமைச்சர் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் ரகியா மீது உள்ள அதீத காதலால் அவரை யாரும் தடுத்து நிறுத்த முடியவில்லை என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது அமைச்சர் தனது வீட்டில் மனைவி ரகியாவை வைத்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.