ஆத்தி... விமான சக்கரத்தில் தொற்றிக்கொண்டு டெல்லி வந்த 13 வயது சிறுவன்! திக் திக் 94 நிமிடங்கள் ! அதிர்ச்சி சம்பவம்...



afghan-boy-survives-plane-journey

உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவர் விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து கொண்டு இந்தியாவுக்கு பயணம் செய்த சம்பவம் வெளிச்சம் பார்த்துள்ளது. இந்தச் சம்பவம், விமான நிலைய பாதுகாப்பு குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

94 நிமிடங்கள் உயிர் பிழைத்த சிறுவன்

காபூலில் இருந்து டெல்லி வந்த காம் ஏர் விமானத்தின் (RQ4401) சக்கரத்தில் சிறுவன் ஒளிந்துகொண்டு பயணம் செய்துள்ளார். மொத்தம் 94 நிமிடங்கள் நீடித்த இந்த ஆபத்தான பயணத்துக்குப் பிறகு, அவன் டெல்லி விமான நிலையத்தில் உயிருடன் தரையிறங்கியுள்ளார்.

விமான பயணத்தின் விவரம்

காபூலின் ஹமித் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8:46 மணிக்கு புறப்பட்ட விமானம், டெல்லி டெர்மினல் 3 இல் காலை 10:20 மணிக்கு தரையிறங்கியது. பயணிகள் இறங்கிய பின், தடைசெய்யப்பட்ட பகுதிக்கு சிறுவன் நடந்து செல்வதை ஊழியர் ஒருவர் கவனித்தார். உடனடியாக அவர் தகவல் அளித்ததால், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் அவனை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: அகமதாபாத் விமான விபத்தில் முன்னாள் முதல்வர், கணவரை முதல்முறை பார்க்க சென்ற புதுமணப் பெண் பலியாகினர்! நெஞ்சை உலுக்கும் துயர சம்பவம்...

சிறுவனின் விளக்கம்

குர்தா, பைஜாமா அணிந்திருந்த அந்தச் சிறுவன், ஈரானுக்கு செல்ல விரும்பியதாகவும், தவறுதலாக இந்தியா செல்லும் விமானத்தில் ஏறியதாகவும் கூறியுள்ளார். அவர் பயணிகளைப் பின்தொடர்ந்து சக்கரங்களில் ஒளிந்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மரணத்தை தவிர்த்த அபாயகரமான பயணம்

30,000 அடி உயரத்தில் வெப்பநிலை -40°C முதல் -60°C வரை குறையும் நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும். பொதுவாக இத்தகைய சூழ்நிலையில் உயிர் பிழைப்பது சாத்தியமற்றது என விமான நிபுணர்கள் கூறுகின்றனர். விமான நிபுணர் கேப்டன் மோகன் ரங்கநாதன், சிறுவன் சக்கர அறை மூடிய பகுதியில் இருந்திருக்கலாம் என்பதால் வெப்பநிலை சமநிலையாக இருந்திருக்கும் என்றும், அதனால் உயிர் பிழைத்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னோடி சம்பவங்கள்

இதேபோன்ற சம்பவங்கள் உலகளவில் மிகக் குறைவாகவே நிகழ்ந்துள்ளன. புள்ளிவிவரப்படி, ஐந்து பேரில் ஒருவரே உயிர் பிழைப்பர். இந்தியாவில் இதுவே இரண்டாவது சம்பவமாகும். 1996 அக்டோபர் 14 ஆம் தேதி, பிரதீப் சைனி மற்றும் விஜய் சைனி என்ற சகோதரர்கள் டெல்லியில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்துகொண்டனர். இதில் பிரதீப் உயிருடன் மீட்கப்பட்டார்; ஆனால் விஜய் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுவனின் இந்த அசாதாரண செயல், விமான நிலைய பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது. இதன் மூலம் விமானப் பயணத்தின் அபாயகரமான தருணங்கள் உலகிற்கு நினைவூட்டப்பட்டுள்ளன.

 

இதையும் படிங்க: பிஞ்சு குழந்தை என்னடா பாவம் பண்ணுச்சு! 3 வயது குழந்தையை ரயிலில் இருந்து இறக்கி விட்டு விட்டு... பகீர் சிசிடிவி காட்சி!