தரையிறங்கியபோது இரண்டாக பிளந்த விமானம்...! பதற வைக்கும் வீடியோ காட்சி...

தரையிறங்கியபோது இரண்டாக பிளந்த விமானம்...! பதற வைக்கும் வீடியோ காட்சி...



aeroplane-solits-in-2-parts

விமானம் ஒன்று தரையிரக்கப்பட்டபோது  இரண்டாக உடைந்து துண்டான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கோஸ்டாரிகா தீவில் உள்ள ஹுவான் சாண்டா மரியா பன்னாட்டு விமான நிலையத்திற்கு டி.ஹெச்.எல் நிறுவனத்தின் மிகப்பெரிய சரக்கு விமானம் ஒன்று ஜெர்மனியிலிருந்து சரக்கு ஏற்றி வந்துள்ளது. இந்நிலையில் விமானத்தின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக விமானம் தரையிரகப்பட்ட நிலையில் தரையில் மோதிய விமான இரு துண்டாக உடைந்தது.

இதனால் விமானம் தீப்பிடிக்க தொடங்கியதால் தீயணைப்பு  வீரர்களுக்கு உடனடியாக தகவல்  கொடுத்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.