உலகையே ஆட்டிபடைக்கும் கொடிய கொரோனா வைரஸ்! நடிகர் அரவிந்த்சாமி கொடுத்த டிப்ஸ் பார்த்தீர்களா!

உலகையே ஆட்டிபடைக்கும் கொடிய கொரோனா வைரஸ்! நடிகர் அரவிந்த்சாமி கொடுத்த டிப்ஸ் பார்த்தீர்களா!


actor-aravinthsamy-tweet-about-coronovirus

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் உயிரைக் குடிக்கக்கூடிய இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 6000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மேலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு,  தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 107 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதற்காக பல மாநில அரசுகளும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி,  தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி வருகிறது. 

aravindsamy

இந்நிலையில் நடிகர் அரவிந்த்சாமி கொரோனா வைரஸ் குறித்து சில யோசனைகளைக் கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் சர்வதேச அளவில் இருக்கும் இந்த கொரோனா வைரஸ் தொற்று குறித்து எனது சிந்தனைகள். உலகில் உள்ள,  மற்ற நாடுகளைவிட இந்திய நாட்டில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைக்கு மிகவும் குறைவாகவே உள்ளது. கொரோனா தொற்றை நாம் நிறுத்த வேண்டிய முக்கியமான கட்டத்தில் உள்ளோம். இந்நிலையில் தெளிவான தகவல்கள் கிடைக்கும்வரை அரசு தற்காலிகமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடவும், பொது நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்தவும், அதிக அளவில் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளை ஒட்டி வைக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே பல மாநிலங்களில் இது குறித்த பல நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளது. கோவிட் 19 தொற்றை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் மற்ற அரசுகளின் ஆய்வுகளை வைத்து,  அதனை கருத்தில் கொண்டு அரசு செயல்படும் என நாம் நம்புகிறோம். அனைவரும் கவனமாக பாதுகாப்புடன்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்க வேண்டுமென அரவிந்த்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.