
Summary:
accident
பெரு நாட்டில் மேபெத் எஸ்பினாஸ் மற்றும் ஹெக்ட்டார் விடால் என்ற காதல் ஜோடிகள் இருவரும் பெத்தலஹேம் மேம்பாலத்தில் நடந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தனர்.
அப்பொழுது அந்த இளம் ஜோடிகள் பாலத்தின் விளிம்பில் நின்று கொண்டு முத்தமிட்டுக்கொண்டிருந்தனர். அப்பொழுது பாலத்தின் விளிம்பில் உட்கார்ந்திருந்த காதலி தன் காதலனை தன் காலால் இருக்கி அணைத்து முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது இருவரும் கால் தடுமாறி 50 அடி பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளனர்.
இந்நிலையில் 50 அடி பாலத்தில் இருந்து கீழே விழுந்ததும் காதலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிருக்கு போராடிய காதலனை அருகில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement