பாவம்., ஓவர் டயர்டு போல... மணமேடையில் தூங்கி விழுந்த மணப்பெண்..! வைரலாகும் வீடியோ.!!a Wedding Bride Girl Sleeping at Marriage Reception Function Video Goes Viral

திருமண நிகழ்ச்சிகள் மனிதராக பிறந்த நபர்களால் மறக்க இயலாத நாட்களில் ஒன்று. தனது வாழ்நாள் துணையை கரம்பிடிக்கும் மகிழ்ச்சியான நாளில், பல மறக்க முடியாத நினைவுகளும் இடம்பெறும். 

அந்த வகையில், மணமேடையில் அமர்ந்துள்ள மணப்பெண் தொடர் கண்விழிப்பு காரணமாக பாதிக்கப்பட்டு, மணமேடையில் மெய்மறந்து உறங்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ யாரால்? எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லை. 

ஆனால், வடமாநிலத்தில் இந்த திருமண நிகழ்வு நடந்துள்ளது அவர்களின் உடை அலங்காரத்தில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. திருமணங்கள் என்றாலே முதல் நாள் நண்பர்களை சந்திப்பது, போட்டோ சூட் என மணமக்கள் பிசியாக இருப்பார்கள். மறுநாளில் அதிகாலை எழுந்துகொள்ளும் சூழல் இருப்பதால், இப்படியான அசதி உறக்கம் நிகழ்ந்து இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்துகள் தெரிவிக்கின்றனர்.