பெண்ணின் காதில் கூடு கட்டிய சிலந்தி; அதிர்ச்சி தந்த சம்பவம்.! 



a Spider Nest in Women Girl Living in United Kingdom 

 

ஐரோப்பிய நாட்டில் உள்ள செஸ்ஹைர் பகுதியைச் சார்ந்த பெண்மணி லூசி வைல்டு. கடந்த சில நாட்களாகவே இவர் காது சார்ந்த பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளார். எப்போது பார்த்தாலும் காதில் திடீர் வலி, அரிப்பு போன்றவை ஏற்பட்டுள்ளது. 

முதலில் இது சாதாரண பிரச்சனையாக இருக்கலாம் என பெண்மணி அலட்சியமாக இருந்த நிலையில், பின்னர் வலி அதிகமானதால் அவர் கேமரா கொண்டு தனது காரை சோதித்து இருக்கிறார். 

அப்போது காதில் சிலந்தி ஒன்று வலை பின்னிக்கொண்டிருக்கும் அதிர்ச்சி காட்சிகள் தெரிய வந்துள்ளன. இதனை அடுத்து உடனடியாக மருத்துமவனைக்கு புறப்பட்ட பெண்மணி மருத்துவரிடம் விஷயத்தை கூறியதை தொடர்ந்து, காதில் இருந்த சிலந்திகள் அகற்றப்பட்டன. 

தனது காதில் எப்படி சிலந்தி வந்தது? என தெரியவில்லை என்று கூறும் பெண்மணி, காது சார்ந்த விஷயங்களில் மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.