ஆற்றில் பாய்ந்து முதலையை கவ்விய சிறுத்தை புலி!.. வீரம் என்ற சொல்லுக்கு இலக்கணம்: வைரலாகும் வீடியோ..!a-leopard-jumped-into-the-river-and-grabbed-a-crocodile

காட்டில் உள்ள மாமிச உண்ணி விலங்குகள் தங்களது உணவு தேவைக்கு வேட்டையாடி அவற்றை உண்பது வழக்கம். சிறுத்த புலி ஒன்று ஆற்றின் கரையில் இருந்து தண்ணிரில் சென்று கொண்டிருந்த முதலையை லாவகமாக வேட்டையாடும் அற்புதமான திகில் நிறைந்த காட்சி அடங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முதன்முறையாக இந்த வீடியோ ட்விட்டரில் வஹசி ஹயட்லர் என்ற சமூக தளவாசியால் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி வெளியிடப்பட்டு வைரலாகி உள்ளது. இந்த நிலையில், ஃபிகன் என்ற சமூகதளவாசியால் அந்த வீடியோ இரண்டாவது முறையாக பகிரப்பட்டுள்ளது. இப்போதும் 2 வது முறையாக அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

முதல் முறை வந்த பதிவு:-

அந்த வீடியோ காட்சியில், சிறுத்தை ஆற்றின் அருகே மரக்கிளைகள் மற்றும் புதர்களுக்கு இடையே ஒளிந்துகொண்டு ஆற்றை உன்னிப்பாக கவனிக்கிறது. தண்ணீரில் மிதக்கும் முதலை அருகில் வரும் வரை பொறுமையாக காத்திருந்து முதலை வந்ததும் திடீரென சிறுத்தை முதலையின் மீது பாய்ந்து கபீரென பிடித்து கம்பீரமாக நடந்து கரையேறுகிறது.

இரண்டாவது முறையாக வந்த மீள் பதிவு:-

இதற்கிடையே, முதலை சிறுத்தையிடம் இருந்து தப்பிக்க எடுத்த முயற்சிகள், அதற்கு கை கொடுக்கவில்லை. தண்ணீருக்குள் இருக்கும் முதலைக்கு சிறுத்தையை விடவும் பலம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.