உயரமான கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த குழந்தையை ஓடிப்பிடித்த ஹீரோ: பதைக்கவைக்கும் பரபரப்பான காட்சி..!

உயரமான கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த குழந்தையை ஓடிப்பிடித்த ஹீரோ: பதைக்கவைக்கும் பரபரப்பான காட்சி..!


A hero who runs away from a child who falls from a tall building

சீனாவில் உள்ள சேஜியாங் மாகாணத்தில் உள்ளது டாங்சியாங் என்ற நகரம். இந்த பகுதியில் உள்ள சாலையோரம் அமைந்துள்ளது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகம். அந்த குடியிருப்பில் 5 வது மாடியிலிருந்து ஒரு குழந்தை கீழே விழுந்துள்ளது. அதற்கு நேர் எதிரே நின்று செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்த ஒருவர் இதை கவனித்துள்ளார்.

உடனே அங்கு ஓடிச் சென்ற அவர் அந்த வளாகத்தின் அருகில் சென்று தன் இரு கைகளையும் விரித்து அந்த குழந்தையை தரையில் விழுந்து விடாதபடி பத்திரமாக பிடித்தார். இதன் காரணமாக அந்த குழந்தையின் உயிர் காப்பாற்றப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த குழந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த குழந்தையின் கால்கள் மட்டும் நுரையீரல் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளன என்றும்,  உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மாடியில் இருந்து கீழே விழுந்த இரண்டு வயது குழந்தையை கையால் பிடித்த  நபரை, சீன மக்கள் ‘நம்மிடையே வாழும் ஹீரோ’ என புகழாரம் சூட்டி கொண்டாடி வருகின்றனர். இந்த காட்சி சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.