குழந்தைக்கு "பக்கோடா" என்று பெயர் வைத்த பெற்றோர்!,,. பேரோட காரணம் தெரிஞ்சா இன்னும் ஷாக் ஆயிடுவீங்க..!

குழந்தைக்கு "பக்கோடா" என்று பெயர் வைத்த பெற்றோர்!,,. பேரோட காரணம் தெரிஞ்சா இன்னும் ஷாக் ஆயிடுவீங்க..!


A couple from London named their baby after their favorite snack

குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது பெற்றோர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பொறுப்பு. ஒரு சிலர் குழந்தை பிறந்த நேரத்தை ஜோதிடர்களிடம் கூறி குழந்தையின் ராசி மற்றும் நட்சத்திரத்தை கணித்து, பின்னர் பரிந்துரைக்கப்படும் முதல் எழுத்திற்கு ஏற்ப பெயர் வைப்பார்கள்.

இன்னும் சிலர் ஜாதகத்தை முழுமையாக கணித்து முதல் எழுத்து மற்றும் குழந்தை பிறந்த தேதிக்கான நியூமராலஜி கணக்குகளை போட்டு அதற்கு எற்ப பெயர் வைப்பதுண்டு. சிலர் தங்கள் மூதாதையர் பெயர்களையோ அல்லது குலதெய்வங்களின் பெயர்களையோ குழந்தைகளுக்கு சூட்டுவர். வேறு சிலர் தாங்கள் சார்ந்த கட்சியின் தலைவர் சூட்டும் பெயரை சூட்டுவதுண்டு.

லண்டனை சேர்ந்த தம்பதியினர் தங்களது குழந்தைக்கு தங்களுக்கு விருப்பமான சிற்றுண்டியின் பெயரை வைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த தம்பதியினர் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு பக்கோடா என பெயர் வைத்துள்ளனர். இது அவர்களுக்கு பிடித்தமான சிக்கன் பக்கோடாவை ஆடர் செய்து சாப்பிடும் போது எடுக்கப்பட்ட முடிவு என அந்த குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.

தி கேப்டியன்ஸ் டேபிள் என்னும் உணவகத்தில் இந்த உணவு ஆடர் செய்யப்பட்டதால் , அந்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட உணவகமே தனது இணையத்தில் ஷேர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.