உலகம் காதல் – உறவுகள்

கணவனுடன் இருக்கும் 62 வயது நிரம்பிய மூதாட்டியை மணந்த 9 வயது சிறுவன்!. அதிர்ந்துபோன உறவினர்கள்!.

Summary:

கணவனுடன் இருக்கும் 62 வயது நிரம்பிய மூதாட்டியை மணந்த 9 வயது சிறுவன்!. அதிர்ந்துபோன உறவினர்கள்!.


தென் ஆப்பிரிக்காவில் 9 வயது சிறுவன் ஒருவன் தனது பாட்டி வயதுடைய 62 வயது நிரம்பிய மூதாட்டியை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் ஹெலன் ஷபங்கு. 62 வயது நிரம்பிய இவருக்கு திருமணமாகி ஐந்து குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஷபங்கு வசிக்கும் அதே பகுதியை சேர்ந்தவன் ஷனி மசிலா இவன் 9 வயது நிரம்பிய சிறுவன் ஆவான். 

இதனை தொடர்ந்து அந்த சிறுவன் தனக்கு அடிக்கடி கனவு வருவதாகவும்,அந்த கனவில்   எனது முன்னோர்கள் வந்து அடிக்கடி பேசுவார்கள் எனவும் கூறியுள்ளான்.

மேலும் .அவ்வாறு  சமீபத்தில் அவர்கள் பேசும் போது ஷபங்குவை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எனது முன்னோர்கள் கூறினர் என்று ஷனி கூறியுள்ளான். மேலும் இது குறித்து ஷனி ஷபங்குவிடம் பேசிய நிலையில் அவரும் திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று ஊர் மக்கள் மற்றும் ஷபங்குவின் கணவர் முன்னிலையில் ஷனி மற்றும் ஷபங்கு திருமணம் விமர்சையாக நடைபெற்றது.

பின்னர் திருமணத்துக்கு பின்னர் மனைவியை கட்டிப்பிடித்து ஷனி முத்தம் கொடுத்தான்.சிறுவன் அவன் கூறுகையில்,இது மட்டும் எனது திருமணம் இல்லை  நான் பல திருமணங்கள் செய்வேன் என்பது எனது விதியில் எழுதப்பட்டுள்ளது என்று கூறினான்.

எனவே நான் பெரியவன் ஆனதும் மீண்டும் பல பெண்களை  திருமணம் செய்து கொள்வேன் என கூறி அங்குள்ளவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளான்.


Advertisement