மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
தனது தலையில் இப்படி ஒன்று இருப்பதே தெரியாமல் 4 நாட்கள் கழித்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்..
தலையில் துப்பாக்கிக் குண்டு இருப்பது தெரியாமல் நான்கு நாட்களை கழித்த இளைஞர் ஒருவரின் தகவல் இணையதளத்தில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் மேடியஸ் ஃபேசியோ. மருத்துவம் பயின்றுவரும் இவர் கடந்த புத்தாண்டு தினத்தன்று தனது நண்பர்களுடன் கடற்கரை அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது சிறிய கல் ஒன்று தனது தலையில் தாக்குவது போல் மேடியஸ் ஃபேசியோ உணர்ந்துள்ளார்.
உடனே அவரது தலையில் இருந்து சிறிதளவு ரத்தமும் கசிந்து உள்ளது. பெரிய அளவில் வலியை உணராத அவர் யாரோ விளையாட்டுக்காக சிறிய கல்லை எடுத்து தனது மீது வீசி இருக்கலாம் என்ற எண்ணத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு மேடியஸ் ஃபேசியோ தனது வலது கை செயல் இழப்பதை உணர்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது அவருக்கு மிகப்பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம் மேடியஸ் ஃபேசியோ தலையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது தலையில் 9 எம் எம் புல்லட் இருப்பதை கண்டறிந்தனர். இதனை அடுத்து உடனே அறுவை சிகிச்சையை தொடங்கிய மருத்துவர்கள் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீடியாஸ் தலையில் இருந்த துப்பாக்கி குண்டை பத்திரமாக அகற்றினார்.
மூளையில் குண்டு இருந்ததால்தான் தனது கை செயலிழந்ததாக தெரிவித்துள்ள மேடியஸ் ஃபேசியோ தனது தலையில் குண்டு எப்படி துளைத்தது என்பது தனக்கு தெரியவில்லை என்றும் புத்தாண்டு தினத்தன்று தனது தலையில் யாரோ சிறிய கல்லை வீசுவது போல் மட்டுமே தான் உணர்ந்ததாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இது விபத்தா அல்லது கொலை முயற்சியா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் இணையதளம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.