7000 பேர் கர்ப்பம்.. கொரோனா ஊரடங்கால் பள்ளி மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள அவலம்! - TamilSpark
TamilSpark Logo
உலகம்

7000 பேர் கர்ப்பம்.. கொரோனா ஊரடங்கால் பள்ளி மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள அவலம்!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை வலியுறுத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு நாடுகளில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது.

இதில் கிழக்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த மாலவியா என்ற நாடும் கடந்த 4 மாதங்களாக ஊரடங்கினை அமல்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.

தற்போது அந்த நாட்டில் இருந்து வெளியாகியுள்ள தகவலில் இந்த ஊரடங்கு காலத்தில் மட்டும் 7000 பள்ளி மாணவிகள் கர்ப்பமாகியுள்ளனராம். இவர்களில் பெரும்பாலானோர் 10 முதல் 14 வயதுடைய சிறுமிகள் என்பது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே போன்று கென்யாவிலும் கடந்த 3 மாதங்களில் மட்டும் 1,52,000 சிறுமிகள் கர்ப்பமாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo