700 இந்திய மாணவர்களை முறைகேடாக கனடாவுக்கு அனுப்பி வைத்தது அம்பலம்.. உண்மையை கண்டறிந்த CBSA அதிகாரிகள்.! 

700 இந்திய மாணவர்களை முறைகேடாக கனடாவுக்கு அனுப்பி வைத்தது அம்பலம்.. உண்மையை கண்டறிந்த CBSA அதிகாரிகள்.! 



700 India students illegally sending to Canada

இந்தியாவில் இருந்து கடந்த 2018 - 19ம் ஆண்டில் 700 இந்திய மாணவர்கள் கனடாவுக்கு மேற்படிப்புக்காக விண்ணப்பித்து அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களின் ஆவணங்களை சமீபத்தில் CBSA என்று அழைக்கப்படும் Canadian Border Security Agency சோதனை செய்தது. 

அப்போது, சுமார் 700 மாணவர்கள் போலியான மேற்படிப்பு ஆவணங்களோடு இந்தியாவில் இருந்து கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கனடாவுக்கு வந்த பின்னர் அங்குள்ள வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் சிலர் படிக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

Indian Students

மாணவருக்கு தலா ரூ.16 இலட்சம் என்ற வீதம் பணம் பெற்றுக்கொண்ட ஜலந்தரை சேர்ந்த பிரிஜேஷ் மிஸ்ரா என்பவர், அவரின் வெளிநாட்டு கல்வி உதவி மையத்தின் மூலமாக மாணவர்களை அனுப்பி வைத்துள்ளார். தற்போது 700 இந்திய மாணவர்கள் தாயகம் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.