சாகசத்தின் போது விபரீதம்: விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாப பலி..!

சாகசத்தின் போது விபரீதம்: விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாப பலி..!


6 people were killed when another plane collided with a plane that was taking an adventure in the air in America

அமெரிக்காவில், வானில் சாகசம் செய்து கொண்டிருந்த விமானத்தின் மீது மற்றொரு விமானம் குறுக்கே வந்து மோதியில் 6 பேர் பலி. 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில்  வெளியாகி உள்ளது. விபத்துக்கு உள்ளான இரண்டு விமானங்களும் டெக்சாஸின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற விமான கண்காட்சியில் கலந்து கொள்ள வந்தவை. இவை பழங்கால ராணுவ விமானங்கள் எனவும், அந்த விமானங்கள் வானில் பறந்து சென்ற போது இரண்டு விமானங்களும் மோதி விபத்துக்கு உள்ளானதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக டெக்சாஸ் காவல் அதிகாரிகள் கூறுகையில், ‘டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் விண்டேஜ் விமான கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. அதில், போயிங் பி-17 விமானம் ஒன்று வானில் சாகசங்களை செய்து கொண்டிருந்தது. அப்போது பெல் பி-63 என்ற மற்றொரு விமானம் திடீரென குறுக்கே வந்ததால் எதிர்பாராத விதமாக இரு விமானங்களும் மோதிக்கொண்டன.

அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் இரு விமானங்களும் தீயில் எரிந்தன. சம்பவ இடத்திற்கு 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன. மேலும் இடிபாடுகளில் சிக்கியிருந்தனர்களை காப்பாற்றும் பணி நடந்து வருகிறது. இந்த விபத்தில் விமானி உட்பட 6 பேர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.