உலகம்

தனது உயிரை கொடுத்து, தங்கையின் உயிரை காத்த 5 வயது சிறுமி!! வெளியான கண்கலங்க வைக்கும் துயர புகைப்படம்!!

Summary:

5 year girl save sister soul in syria

சிரியாவின் மேற்கு இட்லிப்பில் அரிஹா என்ற இடத்தில்  ரஷ்ய படை  கிளர்ச்சிப்படைக்கு எதிராக வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்தனர். இந்நிலையில் தாக்குதலில் 5-வது தளத்தில் இருந்த வீடு ஒன்று பெருமளவில் பாதிக்கப்பட்டது.

அங்கு வசித்துவந்த குடும்பமே இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.அப்பொழுது இடிபாடுகளில் சிக்கி தானே உயிருக்கு போராடிய நிலையில் ரிஹாம்  5 வயது சிறுமி , தனது 7 மாத தங்கை துகாவின் உயிரை காப்பதற்காமேலேயிருந்து கீழே விழாமல் அதன் டி சர்ட்ஐ கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளது.

 

மேலும் அதன் தாய் அஸ்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்தை இரு குழந்தைகளும் உயிருக்குப் போராடுவதைக் கண்டும், அதனை மீட்க முடியாமல் கதறுகிறார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்ட நிலையில் 7 மாத குழந்தை பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறது.  தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமி ரிஹாம், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த ஏப்ரல் முதல் ரஷ்யா நடத்தி வரும் இந்த தாக்குதலில் இதுவரை 333000 மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். குழந்தைகள் உள்பட பொதுமக்களில் 600 பேர் உயிரிழந்துள்ளனர்.


Advertisement